சென்னை:

கோட்டூர் பகுதியில் உள்ள வீடுகளில் மின்சார கட்டணம் வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு அதிகரித்திருப்பதை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள கோட்டூர் விரிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில, வழக்குத்துக்கு மாறாக அதிக அளவில் மின்சார  கட்டணம் பதியப்பட்டது. இது வழக்கமாக செலுத்தும் தொகையை விட பலமடங்கு  அதிகம்.

இதுதொடர்பாக  உள்ளூர் மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்று புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மின்சார கட்டணம் வழக்கமாக   ரூ .2,000 முதல் ரூ .2,500 வரை இருக்கம், ஆனால், இந்த முறை மின் கட்டணமாக 13,258 ரூபாய் பதியப்பட்டுள்ளது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்து உள்ளார் அங்குள்ள குடியிருப்பாளர். இந்த மின் கட்டண அதிகரிப்பு அவருக்கு மட்டுமல்ல, அந்த பகுதி முழுவதும் அவ்வாறு உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் குடியிருந்து வரும் வினீத் சிங்கால், தனக்கு வழக்கமாக ரூ .7,000 பில் இருக்கும், ஆனால், இந்த முறை ரூ .14,500 வரை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு குடியிருப்பாளர், தனக்கு ஒருபோல் பில் தொகை ரூ2 ஆயிரத்தை தாண்டாது, ஆனால், தற்போது ரூ .27,000 என பில் போடப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குடியிப்புவாசிகள் தங்களது பில்லுக்கான பணத்தை ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டியதுள்ளதால், இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பொதுமக்களின் புகாரை வாங்கிய அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது,   “நாங்கள் புகார்தாரர்களின் மீட்டர்களில் இருந்து தரவுகளை சேகரித்தோம். அந்த தரவுகள் அனைத்தும்,  தலைமை அலுவலகத்திற்கு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது, ”  “ஓரிரு நாட்களில் பகுப்பாய்வு அறிக்கை வரும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும்,  மீட்டர் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால், அது மாற்றப்படும் என்றவர், தவறான முறையில் மின்கட்டணம் பதியப்பட்டிருந்தால், அதற்கு காரணமாக ஊழியர் மீது  நடவடிக்கை எடுப்போம், ”என்றும்  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.