சென்னை
சுங்கத்துறை அலுவலக இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுங்கத்துறை சென்னை மண்டல இணையதளம் முடக்கப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாகிஸ்தாநுக்கு ஆதசரவாகவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டும் இதே போல இந்த இணையதளம், பாக். தீவிரவாதிகளால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“நவீன யுகத்தில் அரசின் முக்கிய இணையதளங்கள் வழியே பலவித அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் இணையதளங்கள் முடக்கப்படுவது போர் போன்றதுதான். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்” என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.