சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது, இந்த கால்வாயின் 28 மதகுகளில் 50 முதல் 60 சதவீத மதகுகள் மட்டுமே செயல்படுவதாகவும் இதனை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை சீர் செய்து விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே கூவம் ஆற்றுடன் இணைக்க கால்வாயின் கரைகள் உள்ளிட்ட பகுதிகளை சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
தடுப்பு சுவர்கள் மற்றும் உடைந்த பாலங்களால் கால்வாய் மற்றும் அதன் அருகில் தேங்கியிருக்கும் குப்பை மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் பைப்லைன்களால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்படுகிறது.
வெள்ளத்தை குறைக்க இது அனைத்தையும் சீர் செய்து மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் விருகம்பாக்கத்தில் இருந்து கூவம் ஆற்றுக்கு வெள்ள நீர் வரும் கால்வாய் சீரமைக்கடும் என்று தெரிகிறது.