சென்னை: சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  சென்னை மாநகராட்சியிடம் 3,352 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு இருப்பதாகவும், தேவைப்படுவோர் மண்டல அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என தெரித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும்  குப்பையில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின்  நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கும் (TANFED) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி  கையிருப்பில் உள்ள 3,352.77 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பில் இருப்பதாகவும், இதை  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  கடந்த மாதம் 16ம் முதல் இந்த மாதம் 7ம் தேதி  வரை பொதுமக்களுக்கு 23.09 மெட்ரிக் டன் உரங்களும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு 55.65 மெட்ரிக் டன் இயற்கை உரங்கள்  விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அதன்மூலம் சென்னை  மாநகராட்சிக்கு ரூ.3,16,620 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகள் நேரடியாக மாநகராட்சியை அணுகி குறைந்த விலையில் உரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள், நர்சரி கார்டன் வைத்திருப்பவர்கள் மற்றும் இயற்கை உரம் தேவைப்படும் நபர்கள் மாநகராட்சியால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரத்தினை குறைந்த விலையில் பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.கு பயனுள்ளதாக இருக்கும்.