சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, . பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப். 21ஆம் தேதி மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும், தமிழுக்கும் முன்னுரிமை கொடுப்பதாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் தமிழ்நாடு அரசு, சமீபத்தில், தமிழ்மொழி உடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளையும் சேர்த்ததுடன், அயல்நாட்டு மொழியான அரபிக்கும் முக்கியத்துவதும் கொடுத்துள்ளது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது, வடமாநிலத்தவர்களில் ஒருதரப்பினர் கொண்டாடும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை , தேவையற்ற செயல் என்றும், வடமாநிலத்தவனின் வாக்கு வங்கிக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமை தடுக்கிறது என பொதுமக்களும், இறைச்சி வியாபாரிகளும் கூறி வருகின்றனர்.