கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

Must read

சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

bty

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இன்று ஒரே நாளில் 4329 பேருக்குத் தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் இன்று 2082 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 64,689 ஆகி உள்ளது.

தற்போது சென்னையில் மட்டும் 23,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் உதவிக்காகச் சென்னை மாநகராட்சி HQIMS என்னும் மொபைல் செயலியை இன்று  அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமை விவரங்கள், காலம், போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும்.

மேலும் இவர்கள் தங்கள் தினசரி தேவையான மளிகைப் பொருட்களையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

அத்துடன் இந்த செயலி மூலம் தனிமைப்படுத்தபட்டோர் வெளியில் சுற்றுவதை கண்டறிய முடியும்.

இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்`

More articles

Latest article