சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் இருமடங்காக அதிகரித்து வருகிறது.

சென்னையில் இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மண்டலம் 5-ல் (மண்டலம் -5 ராயபுரம்) மட்டும் அதிக பட்சமாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், இவர்களில் 22 பேர் ஒரே பகுதியைச்சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், டெல்லி இமாம் தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பாகி உள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் தனிமைப்படுத்துதலில் இருக்க மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் மட்டுமே நோய் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுஉள்ளது. அதன் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகக்கவசங்கள், ‘என்- 95’ முகக்கவசங்கள், ‘வென்டிலேட்டர்’கள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

[youtube-feed feed=1]