சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டு திடலை தனியாரிடம் வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வருமானத்தை நோக்க மாக கொண்டு, அதற்கான தீர்மானம் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்துடன் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இது பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி வருமானம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளின் மைதானங்கள், பூங்காங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பயிற்சி என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளிடம் பண வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், ஷெட்டில் மற்றும் பேட்மிட்டன் கோட், ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் திடல்கள் போன்றவற்றை தனியாரிடம் தாரை வார்த்துள்ளது. இதனால் அந்த மைதானங்களில் பயிற்சி பெற செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, ஏழை மக்கள் விளையாடி வரும், கால்பந்து விளையாட்டு திடல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது பள்ளி குழந்தைகள் விளையாடும் மைதானத்துக்கும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது சென்னைவாசி களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் நடப்பு மாதத்துக்கான (அக்டோபர் 24) கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற அரசில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று )எசெவ்வாய்கிழரமை) நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடுவது உள்பட 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதுபோல, செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகை விட மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் இன்றைய கூட்டத்தில் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவை முறைப்படி தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே பள்ளி கல்லூரி மாணவர்களின் பொழுது போக்கு விளையாட்டு மைதானங்களா செயல்பட்டு வந்த டென்னிஸ் திடல், ஷெட்டில் பேட்மிட்டன் , ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் தனியாரிடம் பராமரிக்க ஒப்படைக்கப்பட்டு, அங்கு பயிற்சி பெற கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது கால்பந்து மைதானத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கால்பந்து மைதானத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.120 வரை நிர்ணயம் செய்யும் வகையில் தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, வார்டு 37 வியாசர்பாடி கால்பந்து திடல், வார்டு 58 நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67 திரு விக நகர் கால்பந்து மைதானம், வார்டு 77 கே.பி.பார்க் கால்பந்து மைதானம் உள்ளிட்ட 9 இடங்களை ஒப்படைக்க பட உள்ளது.
இந்த மைதானத்தில் இனிமேல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கால்பந்து விளையாட வேண்டுமானால், தனியாரிடம் பணம் கேட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பயிற்சிக்கு வருபவர்களிடம் வசூலிக்கப்படும் 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளனர்