சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மாதத்திற்கான  சென்னை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில்,   துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன் தீப்சிங்பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்,  சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறையில் ஆசிய மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆறு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 46 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. ஆசிய மேம்பாட்டு வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடனாக ரூ.1,789 கோடியிலும், தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.681 கோடியிலும், மாநகராட்சியின் பங்களிப்பாக ரூ.750 கோடி யிலும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பங்களிப்பு ரூ.750 கோடியை கடனாக பெறவும் முடிவு செய்யப்பட்டது. இந்த தொகை தமிழ்நாடு அரசு நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. இந்த தொகை 3 ஆண்டு கால கூட்டத்தில் பெறுவதற்கு மன்ற அனுமதிக்காக விவாதிக்கப்பட்டது. அதற்கான அனுமதி கூட்டத்தில் வழங்கப்பட்டது.

மேலும்,  70 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.