சென்னை
சென்னை மாநகராட்சி கனமழை காரணமாக அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை (அக்.16) மற்றும் 17ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி,
“மழை தொடர்பான புகார், மீட்புப்பணிகளுக்கு 1913 என்ற (150 இணைப்புகள்) எண்ணை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையை 044-2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்”
என அறிவித்துள்ளது.