சென்னை: மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களைஅழைக்கலாம் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், சென்னையில் மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போடும் வகையில், அவர்கள் குடியிருக்கும் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இதுகுறித்து தகவல் பெற் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.