சென்னை : தமிழ்நாட்டு மக்களின் பசியாற்றி வந்த அம்மா உணவகம் பல மூடப்பட்டு வந்த நிலையில், அம்மா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுக்க  சென்னை மாநகராட்சி ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குறைந்த விலை உணவகமான அம்மா உணவகத்துக்கு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பு கிட்டியது. இந்தியாவில் தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சகத்தால் நடத்தப்படும் உணவு மானியத் திட்டமாகும் . இத்திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் கேன்டீன்களின் மாநகராட்சிகள் குறைந்த விலையில் மானிய விலையில் உணவை வழங்குகின்றன. இதனால் ஏராளமான ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாறினர். ஆனால் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அம்மா உணவகங்களுக்கு போதுமான நிதி உதவிகளை திமுக அரசு செய்யாத நிலையிலும், பல உணவங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாலும், அம்மா உணவகம் மூடப்பட்டு வந்ததுடன், போதுமானஅளவில் உணவுகளும் விற்பனை செய்யப்படவில்லை. மேலும் இதற்கு சென்னை மாநகராட்சி போதுமான நிதியும் ஒதுக்காததால், பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.

இதனால், அம்மா உணவகத்தை நம்பிய ஏழை எளிய மக்கள் திமு கஅரசு மீது அதிருப்தி அடைந்தனர். மேலும்,  அம்மா உணவகத்தை முந்தைய ஆட்சியில் இருந்ததுபோல செம்மைப்படுத்தி  உணவுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில்,  அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.  சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை மீண்டும்  வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும். அம்மா உணவகங்களில் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்ற வேண்டும். அம்மா உணவகம் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அம்மா உணவகங்களின் பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, மீண்டும் அம்மா உணவகங் களுக்கு புத்துயிர் அளிக்க அரசு முன்வந்துள்ளது.

விரைவில் மூடப்படுகிறது அம்மா உணவகம்? இரவு உணவு கட்….