சென்னை: சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர மாநகராட்சி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வெளியூர்களில் இருந்து அதிக நபர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு வருபவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இந்த 4 பகுதியும் மாதவரம் மண்டலத்தில் இருப்பதாகவும், மீதமுள்ள 14 மண்டலங்களில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]