சென்னை

ற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. வரும் 16 ஆம் தேதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும்.

இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் 64 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவையும், 33 ஏரிகள் நிரம்பும் தறுவாயிலும் உள்ளன.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 29 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவையும், 12 ஏரிகள் 99 சதவீதமும் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.