சென்னை:
விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி.  பாதிக்கப்பட்டவர்களுக்கு…?
ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது.
கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை ஓட்டிய விகாஸ் என்ற கார் பந்தய வீரர், ஆட்டோ டிரைவர் ஒருவரின் சாவுக்கு காரணமானார் அல்லவா..
அந்த ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகளான ஏழு வயது ஆயிஷா வின் எதிர்கால வாழ்க்கைதான் கேள்விக்குறியாகி நிற்கிறது. ஏற்கெனவே தாயை இழந்த அந்த சிறுமி, தற்போது தந்தையையும் இழந்து அநாதையாக பரிதவித்து நிற்கிறாள்.

ஆயிஷா
ஆயிஷா

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம். அதே பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மாயிஷா (7), ரஞ்சனா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள்.
மனைவியும், மகள்களும் திருத்தணி அகூரில் வசிக்க… ஆறுமுகம் மட்டும் சென்னையில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார்.
ராத்திரி பகல் பராமல், வாடகை ஆட்டோவை ஓட்டி வந்தார் ஆறுமுகம். தினமும் 300 ரூபாய்தான் சம்பளம்.
ஆனாலும், அரைவயிறு கால் வயிறு சாப்பிட்டு, ஊரில் இருக்கும் குடும்பத்தாருக்கு பணம் அனுப்புவார். வாய்ப்பு கிடைக்கும்போது ஊருக்குச் சென்று மனைவி குழந்தைகளை பார்த்துவருவார்.
அப்படிச் செல்லும்போது மனைவியின் முகம் மலந்த வரவேற்பும், குழந்தைகள் ஓடிவந்து “அப்பா” என காலைக் கட்டிக்கொள்வதும்தான் ஆறுமுகம் அனுபவித்த மகிழ்ச்சி.
ஆனால் கடந்த மே மாதம், ஆறுமுகத்தின் வாழ்வில் மிகப்பெரிய அதிரச்சி. குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது மனைவி புஷ்பா,  மகள் ரஞ்சனாவைக் கொன்றுவிட்டு தீக்குளித்து மாண்டார்.
இதனால் ஆறுமுகத்தின் மூத்த மகள் மாயிஷா, தாயையும், தங்கையையும் இழந்து  தவித்து நின்றார். பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
மனைவியையும், ஒரு மகளையும் இழந்த மாரியப்பன், மிகுந்த துயரத்துக்கு ஆளானார். பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மீண்டும் சென்னை வந்து ஆட்டோ ஓட்டினார்.
ஆறுமுகம்
ஆறுமுகம்

“என் மனைவியும் இரண்டாவது மகளும் இறந்த அன்றே நானும்  தற்கொலை செய்துகொண்டிருப்பேன். என் மூத்த  மகள் மாயிஷாவுக்காகவே வாழ்கிறேன்” என்று அடிக்கடி தன் சக ஆட்டோ டிரைவர்களிடம் சொல்வார்.
தாயில்லாப் பிள்ளையாகிவிட்ட மாயிஷாவை சிறப்பாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. 24 மணி நேரமும் ஆட்டோதான். சவாரி இல்லாத நேரத்தில் அதிலேயே படுத்து தூங்குவார். கட்டணக் கழிப்பிடங்களையே குளிக்கவும் பயன்படுத்தி வந்தார்.
கடந்த 18-ந்தேதி இரவிலும் ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களுடன் தனது ஆட்டோவையும் நிறுத்திய ஆறுமுகம், அதிலேயே  ஆறுமுகம் தூங்கினார். அப்போதுதான் கார் பந்தய வீரரான விகாஸ், மது போதையில் சொகுசு காரை தாறு மாறாக ஓட்டிச்சென்று 12 ஆட்டோக்கள் மீது மோதினார். இதில் ஆறுமுகத்துடன் சேர்த்து 9 ஆட்டோ டிரைவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகம் மாண்டார்.
3 மாதத்துக்கு முன்னர் தாயும், சகோதரியையும் இழந்த அவரது மகள் மாயிஷா தற்போது யாரோ ஒருவரின் மது போதைக்கு தந்தையையும் பலிகொடுத்து அநாதையாக நிற்கிறாள்.
இதனால், மாரியப்பனின் அகூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
18-ந்தேதி இரவில் விபத்தில் சிக்கிய ஆறுமுகம் மறுநாள் காலையில் உயிரிழந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும் ஆறுமுகத்தின் உறவினர்கள் கதறி அழுதனர். ஆனால் அப்பா மறைந்த சோகத்தை கூட உணராமல், மாயிஷா விளையாடிக் கொண்டிருந்தாள்.
இப்போதும் அவள், தந்தையின் மரணத்தை உணரவில்லை., “அப்பா எப்போது வருவார்” என்று கேட்டபடியே இருக்கிறாள்.
அவளை பராமரித்து வரும் பாட்டி மஞ்சுளாவவும், உறவினர்களும் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
மஞ்சுளா
மஞ்சுளா

பாட்டி மஞ்சுளா, “குறைவான வருமானம் என்றாலும் மாரியப்பன் சம்பாதித்துக்கொடுத்தார். இப்போது ஆயிஷாவை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. வயதான காலத்தில் என்னால் என்ன வேலை செய்ய முடியும்” என்று அழுகிறார்.
மாயிஷாவை அவரது உறவினர்களின் கைதூக்கி விடுவார்கள் என்று நம்புவோம்.
அதோடு, அரசும் மாயிஷாவுக்கு உதவேண்டும்.  மேலும் நல்ல மனதுடையோர் இந்த அநாதை சிறுமிக்கு உதவ வேண்டும்.