சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தவிர சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
தற்போது சென்னையில் வேளச்சேரி, பள்ளிகரனை, தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர் மற்றும் பல்லாவரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]