சென்னை

விரைவில் சென்னை விமான நிலைய பன்னாட்டுப் புறப்பாட்டு மையத்தில் புதிய வகையான லக்கேஜ் பரிசோதனை முறை அமைக்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் சென்னை பன்னாட்டு விமான புறப்பாட்டு மையத்தில் பயணிகளின் அனைத்து லக்கேஜுகளையும் சோதனை இட்டு வந்தது.   தற்போது இந்திய  விமான நிலைய குழு அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.  தற்போது இந்த குழுவின் ஊழியர்கள் இந்த லக்கேஜுகளை சோதனை செய்து வருகின்றனர்.   இதற்காக ஒரு முறை ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை மூலம் பயணிகளின் லக்கேஜுகள் முழுமையாகச் சோதிக்க இயலாத நிலை உள்ளது.   எனவே அதைச் சரி செய்ய புதிய பரிசோதனை முறை அமைக்கப்பட்டுள்ளது  இந்த முறையின் படி பல்முனை ஸ்கேனிங் மூலம் பயணிகள் லக்கேஜ் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய முடியும்.   பயணிகள் தங்கள் லக்கேஜுகளை சோதனையில் ஒப்படைத்து விட்டுக் குடியேறல் பகுதிக்குச் செல்வதற்கும் இந்த சோதனை முழுமையாக முடிவடையும்.

இவ்வாறு  பன்முறை சோதனை செய்யப்படுவதால்  சந்தேகத்துக்குரிய அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை விமான நிலைய பாதுகாப்புப் படையினர்  சுலபமாகக் கண்டறிய முடியும்.   இந்த இயந்திரங்களைக் கையாள கொச்சியில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த முறை விரைவில் சென்னை பன்னாட்டுப் புறப்பட்டு மையத்தில் செயல்பட உள்ளது.

இதே முறை உள்நாட்டு விமான புறப்பாட்டு மையத்திலும் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்பட உள்ளது.