சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பின்மை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 103 பேர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக மயக்க மடைந்த நிலையில், 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சுமார் 15 லட்சம் பேர்  கொளுத்திய வெயிலையும் கண்டுகொள்ளாமல்  கடற்கரையில் குவிந்த நிலையில், அவருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விமான சாசக நிகழ்ச்சியின்போது, வெயிலில் நின்று அதை கண்டுவந்த பொதுமக்கள் பலர் வெயிலின் தாக்கத்தால் மயக்க மடைந்தனர். பொதுமக்கள் 108 பேர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 30 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் உள் நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்நோயாளிகள் யாரும் இல்லை, அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சில உடல் நலக் குறைபாடுகள் காரணமாக உள்நோயாளிகளாக இருந்த இருவர், இருவரும் சீராக உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்   இவர்களில் , 60 வயது மதிக்கத்தக்க ஜான் உயிரிழந்துள்ளார். 9 பேர் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.  முன்னதாக கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவர், நிகழ்ச்சியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன், தினேஷ் குமார் ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நிகழ்ச்சியைக் காணும்போதே மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முன்னதாக, போலீஸாரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். காலை 7 மணி முதலே நிகழ்வு நடைபெறும் இடத்தில் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது.

காலையில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், காவல் துறையினர் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது.

எனினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது.

இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது. இதில் ஏராளமான பொதுமக்கள் மாட்டிக் கொண்டதால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.

மத்தியஅரசின் நிகழ்ச்சி என்பதால் மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநகராட்சி உள்பட அரசு நிர்வாகிகள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே இந்த உயிரிழப்புகளக்கு காரணம் என்று  சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.