சென்னை:
சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடுகளை விட்டு வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்,” என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனிவரும் நாட்களில் விதிகளை மீறி வெளியே வந்தால் கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]