MRTS மற்றும் புறநகர் ரயில் பாதைகளை போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு (Transit-Oriented Development -TOD) பகுதிகளாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
தவிர, இந்த வழித்தடத்தில் இருந்து 500 மீட்டர் வரையிலான கட்டுமானங்களுக்கு விதிக்கப்படும் ப்ரீமியம் FSI கட்டணத்தை ஏற்கனவே விதிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்துள்ளது.
சென்னை கடற்கரை முதல் வண்டலூர் வரையிலான 34.6 கி.மீ. வழித்தடம், சென்னை கடற்கரை முதல் மீஞ்சூர் வரையிலான 26.2 கி.மீ. வழித்தம் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் திருநின்றவூர் வரையிலான 29.4 கி.மீ வழித்தடம் என புறநகர் ரயில் பாதையில் உள்ள மொத்தம் 90.2 கி.மீ. தூரம்.
சென்னை கடற்கரைக்கும் – வேளச்சேரிக்கும் இடையே உள்ள 17 ரயில் நிலையங்கள் நிலையங்கள் மற்றும் வேளச்சேரியில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை நீடிக்கப்படவுள்ள 5 கி.மீ ரயில் பாதை என எம்ஆர்டிஎஸ் ரயில்பாதையில் மொத்தம் 19.7 கிமீ தூரத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த புதிய கட்டண சலுகை பின்பற்றப்படும்.
ஏற்கனவே ஆகஸ்ட் 2022 இல் மெட்ரோ ரயில் பாதைகளை TOD பகுதி என்று அறிவித்து பிரீமியம் FSI கட்டணங்களைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் MRTS மற்றும் புறநகர் ரயில் வழித்தடங்களில் உள்ள பகுதியையும் TOD பகுதி என்று அறிவித்து பிரீமியம் FSI கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2019 இல் FSI 1.5ல் இருந்து 2 ஆக உயர்த்தப்பட்ட பிறகு, பிரீமியம் FSI (சாலை அகலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்) கூடுதலாக 2 FSI அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்படுவதே ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.