டாலமி முதல் சுந்தர் பிச்சையின் கூகுள் வரை உலக வரைபடத்தில் சென்னை எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் விக்ரம் ராகவன் கலந்து கொண்டு சென்னை பற்றிய பல அரிய வரைபட குறிப்புகள் குறித்து கூறினார்.

செவிவழி செய்திகளைக் கொண்டு வரைபடம் வரைய முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டு அறிஞர் டாலமி தொடங்கி தமிழகத்தின் பூம்புகார் மற்றும் காவிரிபூம்பட்டிணம் இடம்பெற்ற வரைபடங்கள் என்று ஏராளமான வரைபடங்கள் காணக் கிடைப்பதாக கூறினார்.

ஆங்கிலேயருக்கு முன்பே சென்னையில் காலூண்றிய போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் பகுதியை நிர்மானித்ததன் வரைபடம் 15 ம் நூற்றாண்டில் வெளியானதாக தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து கிழக்கு இந்திய கம்பெனியின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரைபடமும் பின்னர் பிளாக் டவுன், ஓயிட் டவுன் வரைபடமும் வெளிவந்தாக கூறியதோடு பெரிய நாயக்கன்பேட் முத்தியால்பேட் உள்ளிட்ட சென்னையின் பழமையான இடங்கள் நூறாண்டுகளுக்கு முன்னரே வரைபடத்தில் இடம்பிடித்தாக குறிப்பிட்டார்.

முதல் உலகப்போரில் தாக்குதலுக்கு ஆளான சென்னை பிறநாட்டு ராணுவ வரைபடத்திலும் இடம்பெற்றிருந்ததை சான்றுகளோடு விவரித்தார்.

சிறு சிறு குடியிருப்பு பகுதிகளை இணைத்து ஆங்கிலேயர்கள் கட்டமைத்த சென்னை நகரம் இப்போது 200 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக உருவெடுத்துள்ளதோடு போக்குவரத்து கட்டமைப்பில் மற்ற நகரங்களை விஞ்சி நிற்கிறது.

சென்னைக்கு வயது 383 தானா ?