செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார்.
பிற சன்னதிகள்
உள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சிறப்பு
இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்,
Patrikai.com official YouTube Channel