சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்ட உள்ளது. இதையடுத்து ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏற்கனவே  செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியாக இருந்து வந்த நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 500 கன அடியாக அதிகரித்துள்ளனர். செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வினாடிக்கு 500 கனஅடி நீர் தீறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய், அடையாறு ஆற்றின்கரையோரம் உள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து வருவதாகவும் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாலும் அடையாறு ஆற்றை தூர்வாரி, கரையை பலப்படுத்தி, 10 மீட்டர் அளவுக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்தி உள்ளதாலும் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினால்கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்