சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் எதிரொலியாக கொட்டிய கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 25ம் தேதி முதல் நீர் விடப்பட்டது. ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

தற்போது நீர் வரத்து முற்றிலும் குறைந்ததால், நீர் திறப்பை மூட முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

மதகுகளுக்குள் ஏராளமான செடிகள் சிக்கி கொண்டதால் வினாடிக்கு 350 கனஅடி நீர் வீணாக வெளியேறியது. தற்போது மதகுகளில் சிக்கிய செடிகள் அகற்றப்பட்டு உபரி நீர் நிறுத்தப்பட்டது. பின்னர் மதகு மூடப்பட்டது.

[youtube-feed feed=1]