பழனி:
முருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா ? பிஜேபி குத்தாட்ட கூட்டமா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பழனிக்கு வேல் யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், அனுமதியின்றி புகைங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் கோவில் நிர்வாகம் புகாரளித்துள்ளது.

கொரோனா காரணமாக பழனி கோவில் மின் இழுவை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி தமிழகத்தின் பல பகுதிகளில் வேல் யாத்திரை நடத்தி வரும் பாஜகவினர் பழனியிலும் வேல் யாத்திரை நடத்தினர். அப்போது பழனி கோவிலுக்கு சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோருக்காக மின் இழுவை ரயில் பிரத்யேகமாக இயக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கோவில் புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், எல்.முருகன் புகைப்படம் எடுத்து முகநூல் பதிவிட்டுள்ளார். விதிகளுக்கு எதிரானது என கோவில் நிர்வாகம் புகார் அளித்ததால், பாஜக முகநூல் பகுதியிலிருந்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.