அமிதாப், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘செஹ்ரே’ படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது குறித்து அம்மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகின்றன.

இந்நிலையில் ‘செஹ்ரே’ படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன், இம்ரான் ஹாஸ்மி இணைந்து நடித்துள்ள படம் ‘செஹ்ரே’. ரூமி ஜாஃப்ரி இயக்கியுள்ள படத்தில் ரியா சக்ரவர்த்தி, அன்னு கபூர், கிரிஸ்டல் டிசோஸா, ரகுபீர் யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]