
திருடா திருடி படத்தின் நாயகியாகவும் மற்றும் மன்மத ராசா பாடல் மூலமும் பிரபலமான நடிகை சாயா சிங் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் இணைகிறார்.
2011-இல் சன் டி.வியில் ஒளிபரப்பான ‘நாகம்மா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு சாயாசிங் அறிமுகமானார். வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலுமே பிஸியாக இருந்த சாயா சிங் பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணாவை கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் புதிதாக இணைந்திருப்பதாக சன் டி.வி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சன் டி.வி சீரியல்களை பொருத்தவரை வார வாரம் ஆரவாரம் என்பது போல ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப்பிரபலங்கள் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சிறப்பு ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நடிப்பது உண்டு. இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் சாயா சிங் இணைவது என்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருக்கிறது.
[youtube-feed feed=1]மிரட்டும் வில்லியாக பூவே உனக்காக தொடரில் சாயா சிங்!
Poove Unakkaga| Mon – Sat| 8 PM#SunTV #PooveUnakkaga #PooveUnakkagaOnSunTV pic.twitter.com/7VZLcx5qof
— Sun TV (@SunTV) August 13, 2021