ராய்ப்பூர்’
சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார்.
சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகல் மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இது சதீஷ்கர் மாநிலத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட செயலி ஊழலுக்கும் சத்தீஷ்கர் மாநில அரசுக்கும் என்ன தொடர்பு என்பதை முதல்-மந்திரி பூபேஷ் பகேல் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பகேல்,
“தற்போது வரை சூதாட்ட செயலியை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை? மத்திய அரசுக்கு அதைத் தடை செய்வதற்கும், இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்குமான பொறுப்பு உள்ளது. இதுவரை ஏன் இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும் சூதாட்ட செயலி உரிமையாளர்களுக்கும், இடையே உள்ள தொடர்பு என்ன?”
என்று வினா எழுப்பியுள்ளார்.