இடா நகர்:

ருணாசல பிரதேச மாநிலத்தில் மட்டும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அம் மாநில அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு எல்லையோரத்தில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தில் காலை நான்கு மணிக்கே வெளிச்சம் வர ஆரம்பித்துவிடும். அதே போல மாலை 4 மணிக்கு இருட்டி விடும்.

ஆனால் இந்திய முறைப்படி அலுவலகங்கள் காலை 10 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.

இதனால் மாலை நான்கு மணிக்கு மேல் அலுவலகங்களில் மின்சார விளக்குகள் அவசியம் ஒளிர வேண்டிய சூழல். இதன் காரமமாக மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டியயிருக்கிறது.

ஆகவே இங்கே தற்போதைய இந்திய நேரத்தைவிட (ஐ.எஸ். டி.) இரு மணி நேரம் முன்னதாக வைக்கலாம் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அதாவது இந்தியா முழுமையும் காலை நான்கு மணி என்றால், அருணாசல பிரதேசத்தில் காலை ஆறு மணி. இதனால் தற்போதைய நேரப்படி காலை 8 மணிக்கே அலுவலகம் துவங்கி, மாலை நான்கு மணிக்கு முடித்துவிடலாம்.  ( நேர மாற்றத்துக்குப் பிறகு இது 10 மணி முதல் 6 மணி என்பதாக கணக்கில் கொள்ளப்படும்.)

அமெரிக்கா போன்ற மிகச் சில நாடுகளில் மட்டுமே, ஒரே நாடாக இருந்தாலும் வேறு வேறு நேரங்கள் பின்பற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது.