சேலம்
தென்னக ரயில்வே சேலம் மயிலாடுதுறை ரயில் இயக்கத்தில் மாறுதல் செய்துள்ளது.
தென்னக ரயில்வேவின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’திருச்சி கோட்டம் குளித்தலை- பேட்டைவாயத்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கீழ்கண்ட ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் – மயிலாடுதுறை ரயில் (வண்டி எண் 16812) கரூர் வரை மட்டுமே செல்லும். அதே நேரம் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்”
என்று கூறப்பட்டுள்ளது.