சென்னை: தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து 5ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதைத் தொடர்ந்து ஒருவாரம்  அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விடுமுறை முடிந்து 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறைந்து ஜனவரி 5ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் துவங்கும். மற்றபடி 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.