சென்னை

ரும் மே 1 அன்று ஞாயிற்றுகிழமை கால அட்டவணையின்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது.

வரும் மே 1ஆம் தேதி. (வியாழக்கிழமை) உழைப்பாளர் தினம் ஆகும். உழைப்பாளர் தினம் தேசிய விடுமுறை தினம் ஆகும்.

எனவே அன்றைய தினம் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.