சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் முறைகேடு செய்வது சிசிடிவி காட்சியில் பதிவானதை அடுத்து தேர்தல் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி எழுப்பிய கேள்விக்கு தான் வாக்குச்சீட்டில் குறியீடு செய்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் வாக்குச்சீட்டுகளை பறிக்க முயற்சி செய்த நிலையில் அதில் எத்தனை வாக்குசீட்டு இருந்தது என்பதை குறிப்பதற்காக அதில் குறியீடு வைத்ததாகக் கூறியுள்ளார்.
இதில் வாக்குச்சீட்டுகள் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.