சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை நீள் வட்டப்பாதையில் 4313 கி.மீ. சுற்றிவருகிறது.

ஆகஸ்ட் 9 முதல் 17 வரை தனது தொடர் முயற்சி மூலம் இதனை நிலவுக்கு 100 கி.மீ. தூரத்தில் கொண்டு செல்வதை இலக்காக வைத்துள்ளது இஸ்ரோ.

100 கி.மீ. வரை எந்த ஒரு பெரிய சவாலும் இருக்கப்போவதில்லை என்று கூறும் இஸ்ரோ அதற்குப் பிறகு நிலவை நெருங்க நெருங்க பல்வேறு சவால்களை கையாள வேண்டியுள்ளது என்று கூறியுள்ளது.

ஆகஸ்ட் 23 ம் தேதி நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ள லாண்டரை நிலைப்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது.

சந்திரயான் 2 முயற்சியின் மூலம் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இம்முறை எந்த தவறும் இல்லாமல் வெற்றிகரமாக நிலவில் ஆய்வு மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.