ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3  விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி  14ந்தேதி பிற்பகல் விண்ணில் ஏவப்படும்  நிலையில் கவுன்ட் டவுன் விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடைகொண்டது. இதில் 7 விதமானஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகிறது. லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.  இதற்கிடையே சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக  நடத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து,  திட்டமிட்டபடி ஜூலை  14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் விண்கலம்  விண்ணில் பாயவுள்ளது.

14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….