சென்னை

ல’ அஜித் குமார் லுக் சூப்பர் என நடிகர் சாந்தனு புகழ்ந்ததற்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே தொடர்ந்து ஏதாவது மோதல் சமூக வலை தளங்களில் நிகழ்ந்து வருகிறது.    அவரவருக்குப்  பிடித்த நடிகர்களைப் புகழும் ரசிகர்கள் அவ்வப்போது ஊறுகாய் போல வேறு சில நடிகர்கலையும்க் தங்கள் சண்டையில் இழுத்து விடுகின்றனர்.

பிரபல நடிகர் – இயக்குநர் பாக்யராஜின் மகனான நடிகர் சாந்தனு ஒரு பரம விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே..   சாந்தனு திருமணத்தின் போது நடிகர் விஜய் தாலி எடுத்துக் கொடுத்தார்.  மேலும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் சாந்தனு நடித்ததால் அவர் விஜய்யின் ஆள் எனக் கூறப்பட்டு வருகிறார்.

 சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் இரண்டாம் போஸ்டரை பதிந்த நடிகர் சாந்தனு இந்த படத்தில்ல் தல ஒரு சூப்பர் ஸ்மார்ட் லுக்கில் உள்ளதாக டிவிட்டரில் பதிவு இட்டார்.  ஆனால் அஜித் ரசிகர்கள், “நீங்க விஜய் ரசிகராயிற்றே, தல ய புகழ நீங்க யார்” என்னும் அளவுக்கும் விமர்சித்துள்ளனர்.   இதனால் சாந்தனு மிகவும் வருந்தி உள்ளார்.

சாந்தனு இது குறித்து, “டிவிட்டரில் எது சொன்னாலும் தப்பாகிறது.  நான் சொன்னதை அப்படியே என்னைத் தாக்கப் பயன்படுத்துகின்றனர்.  நான் தல லுக் சூப்பரா இருக்கு என தோன்றியதை புகழ்ந்ததற்கு இத்தனை சர்ச்சைகள் எழுந்துள்ளன” எனக் கூறி உள்ளார்.

அடுத்தாக விஜய் தனக்குப் பிடித்த நடிகர் அஜித் எனச் சொன்னால் ரசிகர்கள் அவரையும் ஒரு வழி ஆக்கி விடலாம் என சமூக வலைத்தளங்களில் ப்லரும் கேலி செய்து வருகின்றனர்.