டெல்லி: தலைநகர் டெல்லி சென்றுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராளுமன்ற வளாகத்தில் உடற்பயிற்சி செய்த காட்சி  தொர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் அவர், இன்று அதிகாலை, எப்போதும்போல தனது உடற்பயிற்சியை பாராளுமன்ற வளாகத்தில் செய்தார்.

பாராளுமன்ற வளாகத்தில், ஓட்டப்பயிறசி மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.