சென்னை

காற்றழுத்த தாழ்வு மையத்தின் நகர்வைப் பொறுத்து சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசத்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அந்த சந்திப்பில், “காற்றழுத்த தாழ்வு மையம் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து மத்திய மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்கிறது.   காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதைப் பொறுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பு உள்ளது.   தமிழ்நாட்டில் நாளை முதல் மழை சிறிது சிறிதாக குறைய வாய்ப்பு உள்ளது” என கூறி உள்ளார்.