சென்னை:

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, “தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதனையடுத்து, வரும் திங்கள்கிழமை முதல் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

கத்திரி வெயிலுக்கு முன்பாக மழை பெய்தால் ஓரளவு கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தின் பல நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.