சென்னை:
மிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மே 24ஆம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை தொடரும். தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழக மாவட்டங்கள், தேனி, கோவை, நீலகிரி, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தொடர்மழை பெய்தால் நீர் தொடர்பான நோய்கள் வேகமாக பரவும் என்பதால் உச்சபட்ச கவனத்துடன் இருக்க தமிழகம், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.