சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல்  11ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 11ந்தேதி வரை புதுச்சேரி தமிழகத்தின் சில பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.