தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

Must read

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1ந்தேதி வரையிலான  5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 30ம் தேதி முதல் வருகிற 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வீரகானூர் (சேலம்), வேப்பூர் (கடலூர்) தலா 5, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 4, சீர்காழி (மயிலாடுதுறை), செந்துறை (அரியலூர்), கரூர், தொழுதூர் (கடலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வளத்தி (விழுப்புரம்), காரையூர் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை_KVK AWS (விருதுநகர்) தலா 3, கோவிலங்குளம் (விருதுநகர்), பேரையூர் (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மேலூர் (மதுரை), பெரம்பலூர், சோலையார் (கோயம்புத்தூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சிதம்பரம் AWS (கடலூர்), எறையூர் (பெரம்பலூர்), பவானிசாகர் (ஈரோடு), Grand அணைக்கட்டு (தஞ்சாவூர்),  தென்பரநாடு (திருச்சி), எமரலாடு (நீலகிரி), சின்னக்கலார் (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), சோலையார் (கோயம்புத்தூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), கெட்டி (நீலகிரி), கிண்ணக்கோரை (நீலகிரி), வம்பன்_KVK AWS (புதுக்கோட்டை), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 2 தலா 1 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  

28.05.2022: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். 29.05.2022, 30.05.2022: இலட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More articles

Latest article