சென்னை:
ளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வட மாவட்டங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 14ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.