சென்னை:
மிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது.
காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க உள்ளது.

இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.