சென்னை: அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் வாபஸ்பெற்ற இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன்ஒரு பகுதியாக,  இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாக வழங்க வழி செய்ய பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இலங்கை நாடாளுமன்றத்தில்  சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றியது. இதற்கு இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்ருது, இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோவை, பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அழைத்தது. விசாரணையின் போது,   போது, “500 மெகாவாட் காற்றாலைத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழுத்தம் தந்ததாக இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்து, டிவிட் பதிவிட்டார். இதைத்தொடர்ந்ருது, எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக  அறிவித்தார்.

இந்த நிலையில்,  இலங்கை மின்வாரிய தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, துணைத் தலைவர் நளிந்த இளங்கோகோன் என்பவர் சிலோன் மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.