Centre warns to petrol bunks
பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் திருடப்படுவது உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆய்வில் உறுதியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் திடீர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், பெட்ரோல், டீசல் திருட்டில் ஈடுபடும் பங்குகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். பல பெட்ரோல் பங்குகளில் மீட்டர்களில் குளறுபடி செய்து அளவுக்கு குறைவாக பெட்ரோல் நிரப்பப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel