டெல்லி: ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான தகவல்களை  வாரம் இருமுறை பதிவேற்ற மத்தியஅரசு, மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோசாவது போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள், ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசும், செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக, அனைத்து ஆசிரியர்களுக்கும்  தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மாநில கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி, தடுப்பூசி விவரங்களை கேட்டறிந்தது. அப்போது, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி  விவாதிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது  குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ள கூகுள் டிராக்கர் மூலமாக வாரம்  இரு முறைஅப்டேட் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தபட்சம் 9.4 மில்லியன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல மில்லியன் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் உள்ளனர். gள்ளி, கல்லுரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில்,  ஆசிரியர்களை முன்னணி தொழிலாளர்களாக அறிவிக்கவில்லை என்றாலும், சில மாநிலங்கள் ஆசிரியர்களுக்கு உடல் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதில் அவர்களின் பங்கைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தின. இந்த நிலையில், ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது.