மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று டில்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.    அவரது போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங், “நான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.   ஆந்திர மாநிலம் பிரிக்க உள்ளதாக அறிவிப்பு வந்த நேரத்தில் நான் பிரதமராக இருந்தேன்.

அப்போது அனைத்து கட்சிகளின் ஆதரவு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாத்க்கப்பட்டது.  நான் நாயுடுவை அப்போதும் ஆதரித்தேன்.    மாநிலம் பிரிக்கப்படும் போது சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என அரசு வாக்குறுதி அளித்துள்ளது.   தனது வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்” என கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andhra Pradesh, chandrababu naidu, Manmohan Singh, Special Status, ஆந்திர மாநிலம், சந்திர பாபு நாயுடு, சிறப்பு அந்தஸ்து, மன்மோகன் சிங்
-=-