சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கும் சம உரிமை உள்ளது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் இயங்கக்கூடிய நாடு ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த உள்ளது.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரியில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகிறது. மேலும் வசூலிக்கப்படும் வரியை மாநில அரசகளுக்கு வழங்குவதிலும் மத்தியஅரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களை களைய குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய, மாநில அரசுகளை கட்டுப் படுத்துவதல்ல என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் உச்சநீதி மன்ற்ததில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
தீர்ப்பில், ‘ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளுக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய நாடு. குழப்பத்தை தவிர்க்கவே இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மத்தியஅரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.