டெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு 5வது தவணையாக ரூ.183 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை போக்க மத்தியஅரசு மாநியம் வழங்கி வருகிறது. மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி,  தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேகாலயா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 4 தவணை நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 5வது தவணையாக   ரூ.9,871 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில், தமிழ்நாட்டுக்கு ரூ.183.67 கோடியும், இதுவரை ரூ.918.33 கோடி கிடைத்துள்ளது.